தாதா சாஹேப் பால்கே விருதுக்கு நடிகர் ரன்வீர் சிங் பரிந்துரை

 

 

நடிகர் ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

மும்பை , ஏப்ரல்-10

பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில், வெளியான ‘பத்மாவத்’ திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியாக நடிப்பில் மிரட்டியிருந்தார், ரன்வீர் சிங். பத்மாவத் படம் ராஜபுத்திர சமூகத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூல் அள்ளியது. ‘பத்மாவத்’ படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுப் பெற்ற ரன்வீர் சிங் சிறந்த நடிப்புக்கான ‘தாதா சாஹேப் பால்கே’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். விருது தேர்வுக் கமிட்டி, ரன்வீர் சிங் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts