தானம் கொடுக்கும் மாட்டின் பல்லை பிடித்து பார்க்க கூடாது

தானம் கொடுக்கும் மாட்டின் பல்லை பிடித்து பார்க்க கூடாது என கேரளா தண்ணீர் விஷயத்தில் தமிழக முதல்வர் கூறிய கருத்து குறித்து  நாடாளுமன்ற உறுப்பினர்  திருநாவுக்கரசர் விமர்சனம் செய்துள்ளார்,

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து தாமும்,  திருமாவளவனும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதாகவும் தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தை  தேசிய பேரிடராக  அறிவித்து ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை  கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,  தண்ணீர் கொடுத்து உதவ முன்வந்த  கேரளா முதல்வர் பிணராய் விஜயனிடம் தண்ணீர் தினமும் தண்ணீர் கொடுத்தால்,  தான் வாங்கி கொள்வேன் என்று முதல்வர் கூறுவது சரியல்ல என்றும் தானம் கொடுக்கும் மாட்டின் பல்லை பிடித்து பார்க்க கூடாது என்றும் தெரிவித்தார்.

 

தமிழக முதல்வர் மழைக்காக யாகம் செய்தாலும் சரி , பூஜை செய்தாலும் சரி மக்களின் தாகம் தீர்ந்தால் போதும் எனக் கூறிய திருநாவுக்கரசர் கடவுளை கட்டாயப்படுத்தி எல்லாம் மழை பெய்ய வைக்க முடியாது என்றார்.  மேலும் மன்மோகன்சிங்கை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுப்பது குறித்து ராகுல்காந்தி தான் முடிவு எடுக்க வேண்டும் என அவர்  கூறினார்.

 

 

 

Related Posts