தான்சானியா நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் உயிரிழப்பு

 

 

தான்சானியா நாட்டின் டார் ஏஸ் சலாம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர்.

ஏப்ரல்-17

தான்சானியா நாட்டின் தலைநகரமான டார் ஏஸ் சலாம் பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த நகரில் உள்ள வீடுகளிலும், சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். நகரில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழை தொடரும் என்பதால் பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts