தான் குடியிருந்த வீடு இடியும் தருவாயில் இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 

நல்லகண்ணுவுக்கும் கக்கன் குடும்பத்தினருக்கும் பொது ஒதுக்கீட்டில் புதிய வீடு ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கக்கன் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதாகவும், தான் குடியிருந்த வீடு இடியும் நிலையில் இருக்கிறது என்ற செய்தி தவறானது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை காட்டி வீடுகளை இடிக்க முடிவு செய்துவிட்டார்கள் எனவும்,  வீடுகளை எப்போது ஒதுக்குகிறார்கள் என்பதை தெரிவித்த பிறகே அதுகுறித்து கருத்து கூற முடியும் என்றும் கூறிய நல்லக்கண்ணு,  பல ஆண்டுகளாக அங்கு குடியிருப்போரை வெளியேற்றக் கூடாது என்பதே தனது கோரிக்கை என்றார்.

Related Posts