தாய்லாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவ செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளதுதையொட்டி, பிரசாரம்

தாய்லாந்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுவ செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளதுதையொட்டி, பிரசாரம்

தாய்லாந்து நாட்டில் 2014-ம் ஆண்டு ஏற்பட்ட ராணுவப் புரட்சியை அடுத்து  பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதனை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ராணுவம், கடந்த ஆண்டு புதிய அரசியல் சாசனத்தை  இயற்றியது. அதன்மீது பொது வாக்கெடுப்பு நடத்தி. மக்களின் ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அங்கு பிரசாரம் செய்வதற்கு எதிர்க்கட்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ராணுவ அரசு உத்தரவிட்டது. இதனிடையே,  தாய்லாந்தில் தேர்தல் நடைபெற்றாலும் அங்கு ஜனநாயகம் மலருமா என்ற கேள்வி எழுந்துள்ளது., புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்ற பின்னரும் செனட் சபை நியமனங்களை ராணுவம்மேற்கொள்ள முடியும். இதன் மூலம் பிரதமர் யார் என்பதை ராணுவம் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும். இப்போது பிரசார தடை நீக்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வழி பிறந்துள்ளது.

Related Posts