தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாய்ராஜ் – சிராக் ஜோடி தங்கம் வென்று சாதனை

தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாய்ராஜ் – சிராக் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

பி.டபுள்யு.எப் சூப்பர் 500 அந்தஸ்து பேட்மின்டன் தொடரின் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற சாதனையை பதிவு செய்திருந்த சாய்ராஜ் , சிராக் ஜோடி, பரபரப்பான பைனலில் சீனாவின் லி ஜுன் ஹுயி -, லியு யூ சென் ஜோடியுடன் நேற்று மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் 21-19 என்ற கணக்கில் இந்திய ஜோடி முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றது.  2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த சீன வீரர்கள், 21-18 என வென்று பதிலடி கொடுத்தனர். இதையடுத்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு ஜோடிகளும் சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால், வெற்றி யாருக்கு என்பது கடைசி வரை இழுபறியாகவே நீடித்தது. எனினும், உறுதியுடன் விளையாடிய சாய்ராஜ் , சிராக் ஜோடி 21-19, 18-21, 21-18 என்ற செட் கணக்கில் 1 மணி, 2 நிமிடம் போராடி வென்று தங்கப் பதக்கத்தை வென்றது. இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts