தாலிபன் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தை ரத்து : ட்ரம்ப்

தாலிபன் தலைவர்களுடனான ரகசிய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கேம்ப் டேவிட் பகுதியில் தாலிபன் தலைவர்கள் மற்றும் ஆப்கான் அதிபர் ஆகியோருடன் ட்ரம்ப் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தார். இதன் மூலம் அமைதி உடன்படிக்கை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் காபூலில் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதற்கு தாலிபன் அமைப்பு பொறுப்பேற்றது. இதைச் சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், தாலிபன் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாகவும், அமைதி உடன்படிக்கையில் இருந்து விலகுவதாகவும் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

Related Posts