திட்டமிட்டப்படி மதிமுக இளைஞர் இணி, மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெறும்- வைகோ

வரும் 23,24 ஆகிய நாட்களில் திட்டமிட்டப்படி மதிமுக இளைஞர் இணி, மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 15-ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு கொண்டாடப்படவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து வருகிற 23, 24 ஆகிய நாட்களில் சென்னை, தாயகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் அணி, மாணவர் அணி கலந்துரையாடல் கூட்டங்கள் திட்டமிட்டபடி நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர், பொறியாளர் மு. செந்திலதிபன், மற்றும் கொள்கை விளக்க அணிச் செயலாளர் வழக்கறிஞர் க. அழகுசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூட்டங்களில் இளைஞர்அணி, மாணவர் அணி நிர்வாகிகளும், மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறும் வைகோ தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts