திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 3 பேர் பலி

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்துக்களில் கேரள வியாபாரி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் : மே-20

கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவிலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற பேருந்து, வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி தேசியநெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் ரத்த காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்களை, கேரளாவை சேர்ந்த வியாபாரி சாஜி என்பவர் காப்பாற்றச் சென்றார். அப்போது அதே நேரத்தில் அதே இடத்தில், பெங்களூரு சென்ற மற்றுமொரு தனியார் பேருந்து  சாலை ஓரம் இறங்கி தறி கெட்டு ஓடியது. அந்தப் பேருந்து மோதியதில் உதவி செய்யச் சென்ற சாஜி என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், படுகாயம் அடைந்த 15 பேரை மீட்டு, வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts