தினகரனுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை: அமைச்சர் வேலுமணி

ஏதாவது பேசிகொண்டிருக்கும் தினகரனுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழை வருவதற்கு முன்பே 4 கூட்டங்கள் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாகவும்,  பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அந்தந்த மாட்டங்களில் அமைச்சர்கள் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜே.சி.பி இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் அனைத்தும் நகராட்சி, மற்றும் மாநகராட்சிகளில் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுக கட்சியை பெரும் பாடுபட்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த நிலைக்கு கொண்டு வந்திருப்பதாகவும், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டதால், தினகரன் இவ்வாறு பேச ஆரம்பித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் இல்லாத தினகரன் தற்போது ஏதேதோ பேசி கொண்டிருப்பதாகவும், அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Related Posts