திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் : மு.க.ஸ்டாலின்

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில் திமுகவினர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிக்கையில் அவர் கூறியுள்ளார். ‘வாக்காளர் சரிபார்த்தல் திட்டம்’ வருகிற 30ம் தேதி வரை நடைபெறுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த காலகட்டத்தில் வழங்கப்படும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர், வருகிற அக்டோபர் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக நிர்வாகிகள் சிறப்பு அக்கறையோடு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில் ஈடுபட அவர் அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள வாய்ப்பினை, முறையாகவும், கட்டாயமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். பெயர் சேர்த்தல்,நீக்கல், மற்றும் திருத்தப் பணிகளில் நிர்வாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts