திமுகவின் கனவை நிறைவேற்ற புதிதாய் பிறந்துள்ளேன் – மு.க.ஸ்டாலின்

திமுகவின் கனவை நிறைவேற்ற புதிதாய் பிறந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

        திமுக தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளராக அண்ணா பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவில் தலைவர் பொறுப்பு உருவாக்கப்பட்டு தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார். தொடர்ந்து 50 ஆண்டுகள் தலைவராக அவர் பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது மறைவிற்கு பிறகு, கட்சியின் 2-வது தலைவராக மு.க.ஸ்டாலின் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

         கட்சியின் பொதுக்குழுவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். பின்னர் பொதுக்குழுவில் ஏற்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக தாம் பொறுப்பேற்றதை பார்க்க கருணாநிதி இல்லையே என்பதுதான் குறை என்றும்கருணாநிதி போல் மொழி ஆளுமை தனக்கு கிடையாது என்றும் கூறினார்.

        தான் கருணாநிதியில்லை எனவும் அவரை போல் தமக்கு பேச தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார். திமுகவின் கனவை நிறைவேற்ற இன்று புதிதாய் பிறந்திருப்பதாக கூறிய ஸ்டாலின், அனைவரும்சொந்த நலன்களை மறந்து, தமிழக மக்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்து உழைக்க அழைப்பு விடுத்தார்.

        பொதுக்குழுவில், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் பேசுகையில், உலக தமிழர்களின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி எனவும், சிலுவைகளை சுமந்தே பதவிகளை அடைந்தார் எனவும் தெரிவித்தார். 

        தி.மு.கவின் பேச்சாளர் என்பதிலே தான் தமக்குபெருமை எனவும், சிறுவனாக பார்த்து தன் கண்முன் வளர்ந்தவர் இன்று தலைவராகி இருக்கிறார் என்றும் தம்பி என அழைத்துக் கொண்டிருந்த ஸ்டாலின் இன்று மரியாதைக்குரிய தலைவர் எனவும் அவர் கூறினார். தி.மு.கவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதுஎனவும், கட்சியை காப்பாற்ற சரியான ஆள் ஸ்டாலின்  தான் எனவும் அவர் தெரிவித்தார்.  

        திமுக தலைவராக ஸ்டாலின் தலைவர் தேர்வு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானதும் அண்ணா அறிவாலயத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

Related Posts