திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்: அழகிரி

திமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து, அதிருப்தியடைந்த அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, திமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்றும் கட்சியில் சேர்வது என்றாலே ஸ்டாலினை தலைவராக ஏற்றுகொள்வதுதான் எனவும் தெரிவித்தார். நான் கட்சியில் சேர எந்த விதமான கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார் எனவும் அழகிரி கூறினார்.

Related Posts