திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், திமுகவையாராலும் அழிக்க முடியாது: ஸ்டாலின்

விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சார பொதுகூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வேட்பாளர் ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

40 மக்களவை தொகுதி மட்டுமல்ல, இடைத்தேர்தல்கள் நடைபெறும் 18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றார்.2003-ம் ஆண்டில் முதன் முதலில் தலைமையேற்க கூடிய மாநாடு கிடைத்தது விழுப்புரத்தில் தான் என நினைவு கூர்ந்தார்.

விழுப்புரத்தில் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்து கல்லூரி ஆகியவற்றை கொண்டு வந்தவர் கலைஞர் எனவும் கலைஞர் ஆட்சியில் இருந்த போது தான் மிகவும் பிறபடுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும் சமச்சீர் கல்வி திட்டமும் கலைஞரின் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

திமுக-வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போவார்களே தவிர திமுக அழியாது என்று  தெரிவித்த மு,க.ஸ்டாலின் வன்னியர் சங்க வெள்ளி விழா மாநாட்டில் கலைஞரை பாராட்டியவர் மருத்துவர் ராமதாஸ் எனவும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்காக இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார் என்பதற்காக நன்றி தெரிவித்தார் ராமதாஸ் என்றார்.

Related Posts