திமுக அணியில் மதிமுக – வைகோ

திமுக அணியில் மதிமுக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

          மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நேர்முக உதவியாளர் கெளரி சங்கர் இல்லத் திருமண விழா மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,செப்டம்பர் 15-ந் தேதி ஈரோடில் நடை பெறும் மதிமுகவின் முப்பெரும் விழா மற்றும் மாநில மாநாட்டில் பருக் அப்துல்லா,சரத்பவார்,கி.வீரமணி, துரைமுருகன், எஸ்.என். சின்கா மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாக கூறினார். திராவிட இயக்கத்திற்கு வருகின்ற அறைகூவல்களை எதிர்த்து இந்த மாநாடு வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

        தொடர்ந்து பேசிய வைகோ திமுக தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஸ்டாலினுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

      திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வைகோ, திமுக அணியில் மதிமுக இருப்பதாக தெரிவித்தார். இந்த திருமண விழாவில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts