திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று : ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகய்யாவை ஆதரித்து மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழி ஆகியோர்

தெற்கு சிலுக்கன்பட்டி, கீழ தட்டப்பாறை, மேல தட்டப்பாறை, வடக்கு சிலுக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். . அப்போது  மு.க.ஸ்டாலினிடம். குடிநீர், வடிகால், மற்றும் குளம் தூர் வாருதல் உள்ளிட்ட  கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின்,  தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதியோர் உதவித்தொகை, குடிநீர் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Related Posts