திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி: ஸ்டாலின் 

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை  ஆதரித்து சென்னை ஐஸ் ஹவுஸ்  சந்திப்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இந்தத் தேர்தல் மூலம் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார், சென்னை மாநகராட்சி மேயராக தான் இருந்தபோது மாநகராட்சி பள்ளிகளில்  கல்வித் தரத்தை உயர்த்தியதாக கூறினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர் எனவும், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய்  போடுவேன் என்ற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்,

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி  மாணவர்கள் கல்விக் கடன் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்,

Related Posts