திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கிறது: மு.க.ஸ்டாலின் 

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில், விவசாயிகள், பொதுநல சங்க நிர்வாகிகள் மற்றும் உப்பள தொழிலாளர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, மணிமுத்தாறு அணையில் இருந்து அதிமுக அரசு இந்த ஆண்டு ஒருமுறைகூட தண்ணீர் திறக்கவில்லை என விவசாயிகள் முறையிட்டனர். பின்னர், பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனை, உப்பள தொழிலாளர்களுக்கு இயற்றப்பட்ட சட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் தெரிவித்ததாக கூறினார்.

பைட்

திமுக 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை என்றாலும், மக்களின் குறைகளை கேட்டறிந்து வருவதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தால், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை திமுக  நிறைவேற்றும் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை தங்களை விட, மக்களுக்கே அதிகம் உள்ளது என குறிப்பிட்ட மு.க. ஸ்டாலின், கட்சிகளை மறந்து இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமாக இருப்பதாக கூறினார்.

பைட்

Related Posts