திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை மு.க.ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளது – திருநாவுக்கரசர்

 திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை மு.க.ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

               திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழுவில் உரையாற்றிய ஸ்டாலின், பாஜக-வை விமர்சித்தார். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

               தொடர்ந்து பேசிய அவர், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளதாகவும், கூட்டணி குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டாலினின் உரை அமைந்துள்ளதாகவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Related Posts