திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம்

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி சிவா, ஆ. ராசா ஆகியோருடன் இணைந்து தங்க. தமிழ்ச்செல்வன் கொள்கை பரப்புச் செயலாளராக செயல்படுவார் என தெரிவித்துள்ளார். கழக சட்டதிட்ட விதி 26-

ன் கீழ் இவர் நியமனம் செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார். அதேபோல், இலக்கிய அணி இணைச் செயலாளராக வி.பி. கலைராஜனும், நெசவாளர் அணி செயலாளராக கே.எம். நாகராஜனும் நியமிக்கப்படுவதாகவும் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

Related Posts