மு.க.ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் ஏராளமான செயல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளதாகவும், அனைத்திலும், அரசியல் ஆதாயம் தேடி, தோல்வி அடைவதுதான் ஸ்டாலினின் ஒரே பணியாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனையளிப்பதாகவும், கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது

Related Posts