திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் வைகோ விடுவிப்பு

2006-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2006-ஆம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் தொடர்பாக வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏ-க்கள் எம்பி-க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து, 26ம் தேதி தீர்ப்பு வழங்க இருந்த நிலையில், மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுதலை செய்து நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.

Related Posts