திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார்

திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணிக்கு தயார் என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை எனவும்,. அழைப்பிதழில் பெயர் இருப்பதால் விழாவில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார். அரசியல் செய்வதற்காக அழைப்பிதழில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக அமைச்சர்களை அமமுகவில் சேர்த்தால் அதைவிட பாவம் ஒன்றும் இல்லை என்றார். தற்போதுள்ள அமைச்சர்கள் காலையும் பிடிப்பார்கள், யாருக்கோ பயந்து கழுத்தையும் பிடிப்பார்கள் என்ற டிடிவி. தினகரன். தங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் அது சந்தனமாக விழும் எனவும், தற்போதுள்ள அதிமுக ஒரு கட்சியே கிடையாது எனவும் தெரிவித்தார்.  33 பேர் நடத்தக்கூடிய டெண்டர் கம்பெனி, இடைத்தேர்தலை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், திமுக, பாஜகவை தவிர்த்து மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் டிடிவி. தினகரன் கூறினார்.

Related Posts