தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாள் – முதல்வர் பழனிசாமி

Want create site? Find Free WordPress Themes and plugins.

  பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

          இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும்  உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத நாள் இப்பக்ரீத் திருநாள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறைவனின் அருளை பெறுவதற்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணத்தை விதைக்கும் நன்னாளாகவும் இந்நாள் விளங்குவதாகவும், இந்த இனிய நாளில், தியாகத்தின் சிறப்பினை மனதிலே நிறுத்தி, இஸ்லாம் போதிக்கும் அறவழியைப் பின்பற்றி, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டுமென்று முதலமைச்சர் பழனிசாமி தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts