திரிச்சூரில் பூரம் விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் குவிந்த்தால் நகரமே விழக்கோலம் பூண்டது

கேரள மாநிலம் கேரள மாநிலம் திரிச்சூரில் நடைபெறும் பூரம் திருவிழா மிகவும் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி வடக்கும்நாதன் சிவன் கோவிலில் நேற்று காலையில் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 30க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது. செண்டை உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பாரம்பரிய இசைக்கருவிகள் கொண்ட பஞ்ச வாத்தியங்கள் முழங்க ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து வாணவேடிக்கைகளும் நடத்தப்பட உள்ளது. பூரம் திருவிழாவிற்காக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்கள் இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் திரிச்சூரில் குவிந்த்தால், நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது

Related Posts