திருச்சியிலிருந்து கோவைக்கு 12-வழிச்சாலை அமைப்பதற்கான நிலஅளவீடு பணி நடைபெற்று வருகிறது – தம்பிதுரை

திருச்சியிலிருந்து கோவைக்கு 12-வழிச்சாலை அமைப்பதற்கான நிலஅளவீடு பணி நடைபெற்று வருவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களிடம் நேரில் குறை கேட்கும் நிகழ்ச்சி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கிராம தார்சாலை அமைக்கும் பூமி பூஜை பணிகளை தொடங்கிதம்பிதுரை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவைக்கு 8-வழிச்சாலை அமைக்க முதலில் திட்டமிட்டப்பட்டிருந்தது எனவும் தற்போது அந்த திட்டம் 12-வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இதற்கான நில அளவீடு பணிகள் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார்.

 

Related Posts