திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

திருச்சி அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட்து.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆர்.எஸ்.வையம்பட்டி இந்திரா காலணியில் சில மாதங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த  அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் வையம்பட்டி மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் – காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Posts