திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை – அரசு மருத்துவமனை டீன் அனிதா அறிவிப்பு

திருச்சியில் நிபா வைரஸ் தாக்குதல் இல்லை என அரசு மருத்துவமனை டீன் அனிதா தெரிவித்துள்ளார்.

திருச்சி : மே-25

திருச்சி மாவட்டம் மாணப்பாறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கேரளாவில் சாலைபோடும் பணிக்கு சென்றுவிட்டு  காய்ச்சலுடன் சொந்த ஊருக்கு திரும்பினார். அதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரைச் சேர்ந்த  ஒருவரும் சபரிமலைக்கு சென்றுவிட்டு காய்ச்சலுடன் திரும்பினார். காய்ச்சலுக்கு நிபா வைரஸ் காரணமாக இருக்கக் கூடும் என்ற அச்சம் இந்தப் பகுதிகளில் பரவியதையடுத்து இருவரும் அந்தந்தப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இருவரின் உடல் நிலை, மருத்துவக் குறிப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த திருச்சி அரசு மருத்துவமனை டீன் அனிதா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இருவருக்கும் நிபா வைரஸ் அறிகுறி இல்லை என்றும் சாதாரண காய்ச்சல்தான் எனவும் தெரிவித்தார். நிபா வைரசுக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Posts