திருச்சியில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு

திருச்சியில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி : மே-18

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சரியான ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டு இயங்குகிறதா? என்பதை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அந்த வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி தீரன் ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் மேற்கு வட்டார போக்குவரத்துறை அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்கள் பாராமரிக்கப்படுகிறதா, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா என்பது பற்றி சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும், ஓட்டுநர்கள் செல்போன் பேசியபடி பள்ளி வாகனங்களை இயக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. 152 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Related Posts