திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது செய்தியளார்களுக்கு பேட்டியளித்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்  அய்யாக்கண்ணு,  விவசாயிகள் வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். காவிரியில் சாகுபடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும், கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படுவாதகக் கூறினார்.

முன்னதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தலைகீழக நின்றும், எலி கறி திண்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Related Posts