திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

துறையூர் அருகே கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக சென்றபோது, லோடு ஆட்டோ டயர் வெடித்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கவிழ்ந்தது. துறையூர் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 8 பேர் மூச்சுத்திறணறி இறந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் பலியானவர்களின் உடல்களை பிரேத  பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் போலீசார் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கிணற்றில் விழுந்த லோடு ஆட்டோ மீட்கப்பட்டது. விபத்தில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர்களது குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Posts