திருச்சி முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தது

திருச்சி முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்ததையடுத்து கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த முக்கொம்பில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் காவிரி, கொள்ளிடம் மற்றும் கால்வாய்களில் பிரித்து அனுப்பப்படுகிறது. இதில் கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து விடும் மதகுகளில் 8 மதகுகள் உடைந்துள்ளன.
அந்த அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீத த்தையும் கடந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பை குறைத்த போது அதில் 8 மதகுகள் உடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் இப்போது கொள்ளிடத்தில் கூடுதல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. கொள்ளிடத்தில் தொடர்ந்து தண்ணீர் பாய்வதை அடுத்து, அந்த ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts