திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல்

 

 

திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வரவேற்கச் சென்ற தொண்டர்கள் மீது, நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார். அவரை வரவேற்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். அங்கு அவர்களை சந்தித்து விட்டு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காரில் தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார். இதைத்தொடர்ந்து, விமான நிலையத்துக்கு வந்த சீமானை வரவேற்க காத்திருந்த நாம் தமிழர் கட்சியினர், மதிமுக தொண்டர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். கட்சி கொடிக்கம்பங்களால் மதிமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதால், அந்த இடமே பரபரப்பானது.

இந்த மோதலில் காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மோதலைக் தடுக்க முற்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் சாதாரண உடையில் இருந்ததால் அவர்களுக்கும் அடி விழுந்தது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டு இரு கட்சியினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related Posts