திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு போதைப்பொருள்கள் கடத்த முயற்ச்சி

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு  நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மலேசியா செல்வதற்காக  திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  அப்போது சிவகங்கையைச் சேர்ந்த பயணி ஒருவரின் கைப்பையில் இருந்த பாட்டிலை சோதனையிட்ட போது அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் இருந்த்து தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.

 

Related Posts