திருச்சி விமான நிலையத்தில் 1418 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.அப்போது, பயணி ஒருவர்  பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்த ஆயிரத்து 418 கிராம் தங்கத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.  இதேபோன்று ஹிப்மதுல்லா என்பவர் காலணிகளில் மறைத்து எடுத்து வந்த 522 புள்ளி 5 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 66 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts