திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

 

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் தேர்த்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இன்று அதிகாலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஏராளமான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Posts