திருச்செந்தூர் ஆவணித் தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி ஆயிரகணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு  தொடங்கியது. திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ தம்பிரான் சுவாமிகள் தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர். ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியான நேற்று சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் வீதி உலா வந்தனர். தூத்துக்குடி  மாவட்ட காவல் துறை சார்பில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Posts