திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ள மயில் சிலை சேதம் அடைந்தது: 6 பேர் மீது வழக்குப்பதிவு 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்  மூலவர் சிலைக்கு முன்பாக 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்லினால் செதுக்கப்பட்ட மயில் சிலை ஒன்று இருந்தது.

மயில்சிலையின் பின்னம் சேதாரம் அடைந்த்தாக கூறி கடந்த 2017 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருமேனி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜா ஆகிய இருவரும்  சிலையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு சிலையை மாற்றி வைத்து விட்டு சென்றனர்.

இது தொடர்பாக பல்வேறு புகார் எழுந்தநிலையில் திருச்செந்தூர் கோவிலில் மயில் சிலை திருடப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினார். அதில் கல்லால் செய்யப்பட்ட மயில் சிலையை திருட முயன்றது உறுதியானது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தென்னரசன் அளித்த புகாரின் படி பரஞ்ஜோதி, உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபன், திருமேனி காவல் பணியாளர்கள் சுவாமிநாதன், ராஜா,  மற்றும் கோவில் கைங்கரியம் செய்து வரும், குமார்,சுரேஷ் ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts