திருத்துறைப்பூண்டியில் பெரியநாயகி உடனுறை மருந்தீசர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

சித்திரை திருவிழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீசர் திருக்கோவிலில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  இசை வாத்தியங்கள் முழங்க ராஜ வீதிகளில் தேர் வலம் வந்த போது முளைப்பாரி, கோலாட்டம் என தேரோட்ட விழா களைகட்டியது

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் மற்றும் திருக்கழுக்குன்றத்தில் புகழ் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள்  உப்பு மிளகு வீசி நேர்த்தி கடன் செலுத்தினர்.

Related Posts