திருப்பதியில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 24ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர  பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு  முன்னதாக ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்த வருடம் பிரம்மோற்சவம் வரும் 30ம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் போது மலையப்ப சுவாமியும், தாயாரும் மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இந்நிலையில் பிரம்மோற்சவத்திற்கு முன்னதாக வரும் 24 ஆம் தேதி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆழ்வார் திருமஞ்சன தினத்தன்று அதிகாலை சுப்ரபாத சேவை உள்ளிட்ட பூஜைகள் முடிந்ததும் பக்தர்கள் தரிசனம் நிறுத்தபடும். இதைத் தொடர்ந்து 6 மணிக்கு கோயில் தூய்மைப் பணிகள் துவங்கும். பின்னர் மதியம் 12 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

Related Posts