திருப்பதியில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன இஎஸ்ஐ மருத்துவமனை  தொடங்கப்படும்

திருப்பதியில் 100 படுக்கைகள் கொண்ட அதிநவீன இஎஸ்ஐ மருத்துவமனை  தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.

      மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், இன்று திருப்பதி, திருமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்து, மரியாதைகளுடன் தீர்த்த பிரசாதங்களையும் நினைவு பரிசுகளையும் வழங்கினர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர், திருப்பதியில் அதிநவீன வசதிகளுடன் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு உதவியுடன் இந்த மருத்துவமனை செயல்பட உள்ளதாக தெரிவித்தார். இதேபோல், விஜயவாடாவில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை விரைவில் தொடங்கவுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

Related Posts