திருப்பதியில் 5 மாதத்தில் 524 கிலோ தங்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், 5 மாதத்தில் 524 கிலோ தங்கம், 3 ஆயிரத்து 98 கிலோ வெள்ளி, 497 கோடி ரூபாய் ரொக்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், பக்தர்கள் செலுத்திய காணிக்கை விவரத்தை தெரிவித்தார். பெருமாள் மீது பக்தர்கள் வைத்துள்ள நம்பிக்கை எந்த அளவிற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பதே காணிக்கையின் அளவு காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

பக்தர்களுக்கு எண்பத்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பில் லட்டுகள் கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts