திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதலமைச்சர் பழனிசாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி : மே-15

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் சேலத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக கார்மூலம் திருமலைக்கு சென்றார். திருப்பதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதையடுத்து, இன்று அதிகாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசனம் செய்தார். ரங்கநாயகர் மண்டபத்தில் வைத்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் சாமி படங்களை வழங்கினர்.

Related Posts