திருப்பதி ஏழுமலையான் கோவில் வசந்த விழாவின் நிறைவு நாளான இன்று சக்கர ஸ்நானம் நடைபெற்றது

திருப்பதி ஏழுமலையான் கோவில் வசந்த விழாவின் நிறைவு நாளான இன்று சக்கர ஸ்நானம் நடைபெற்றது.

      திருப்பதி ஏழுமலையான் கோவில் வசந்த விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வசந்த விழாவின் இறுதி நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி புதேவியுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக வராக சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தை அடைந்தார். மலையப்ப சுவாமி உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளியதை தொடர்ந்து உற்சவர்களுக்கு  திருமஞ்சனம் நடத்தப்பட்டது. பின்னர் சக்கரத்தாழ்வார் கோவில் திருக்குளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தேவஸ்தான அர்ச்சகர்களால் மூன்று முறை நீரில் மூழ்க செய்து சக்கர ஸ்நானம் நடைபெற்றது. பின்னர் குளத்தை சுற்றி காத்திருந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியான கொடி இறக்கம் இன்று இரவு 7 மணி அளவில் நடைபெற உள்ளது.

Related Posts