திருப்பதி கோவில் ஆண்டு வருமானம் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரிப்பு

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சிலவற்றில் வைப்பு வைக்கப்பட்டுள்ள தொகையின் மதிப்பு 12 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது எனவும்,  அவற்றிலிருந்து ஆண்டு தோறும் சுமார்.845 கோடி ரூபாய் வட்டி கிடைத்து வருவதாகவும் தெரிவித்தார். கோவிலின் ஆண்டு வருமானம் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும், இந்த ஆண்டு இதுவரை கோவிலுக்கு இரண்டரை கோடி பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக வழங்கிய வகையில் 8 புள்ளி7 டன் தங்கம், கற்கள் பதிக்கப்பட்ட 550 கிலோ தங்க ஆபரணங்கள் தேவஸ்தானம் வசம் உள்ளதாகவும்,. அதில் ஆபரண தங்கம் உருக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாற்றப்படும்எனவும் அவர் தெரிவித்தார்.  காணிக்கையாக கிடைத்த 8.7 டன் தங்கத்தில், 5 ஆயிரத்து 387 கிலோ பாரத ஸ்டேட் வங்கியிலும், ஆயிரத்து ,938 கிலோ இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும்,  பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த ஆயிரத்த,381 கிலோ தங்கம் வைப்புக் காலம் முடிந்ததை அடுத்து அண்மையில்தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Related Posts