திருப்பரங்குன்றத்தில் பாதாள சாக்கடை திட்டதை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு: ராஜன் செல்லப்பா 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி  உறுப்பினர் ராஜன்செல்லப்பா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வெற்றிக்கு பாடுபடுவதென ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டி ஏற்கனவே அனைவருக்கும் அறிமுகமானவர் எனவும், அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் எனவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  வைத்தியலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சம்பத், துரைக்கண்ணு, மணிகண்டன், செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ஆகியோர்  இணைந்து திருப்பரங்குன்ற இடைத்தேர்தலில் பெரும் வெற்றியை பெறுவதற்கான பணியை தொடங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பரங்குன்றத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாதாள சாக்கடை  திட்டத்திற்கு  மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவு ராஜன்செல்லப்பா கூறினார்.

Related Posts