திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை சோலையழகுபுரம் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாமை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு  துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை எனவும், இங்கு அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி எனவும் தெரிவித்தார். கூட்டுறவுத் துறை மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்க அரசு உத்திரவிட்டுள்ளது எனவும் அழகிரி பின்னால் போனால் திமுகவில் கட்டம் கட்டி விடுவார்கள் என தெரிந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொணடனர் எனவும், இந்த பேரணி மூலம் அழகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

Related Posts