திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்:   சம்பத் 

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,  தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருங்குடியில் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய அவர், அதிமுக அமோக வெற்றி பெற்று கோட்டைக்கு போவது உறுதி என்று தெரிவித்தார்.தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், தொழில் துறை முன்னேறி உள்ளதாகவும் அவர் கூறினார். கோதாவரி காவேரி திட்டத்தை நிறைவேற்றிட தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்லவும், திருப்பரங்குன்றம் தொகுதி தேவைகளை பூர்த்தி செய்ய  அதிமுக வேட்பாளர் முனியாண்டியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்

Related Posts