திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் 

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.  எனவே திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை எனவும், அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது குறித்து உரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Posts