திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயில் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் : ஏப்ரல்-03

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 21–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவினையொட்டி தினமும் முருகப்பெருமான், தெய்வானை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

மேள, தாளங்கள் முழுங்க கோவிலில் உள்ள உற்சவர் சன்னதியிலிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக வந்து தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, அங்கு கூடி இருந்த ஏராளமான பொதுமக்கள், பக்தி கோஷங்கள் எழுப்பியபடி தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

Related Posts